பிரதம விருந்தினராக
நகைச்சுவை மன்னன் மாசி
பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த திரு மாணிக்கம் சின்னராசா (மாசி) அவர்கள்
எமது சிவராத்திரி நிகழ்வுகளில் இம்முறை பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வுகளை சிறப்பித்த முதுபெரும் நகைச்சுவை நாடக மன்னன் திரு மாணிக்கம் சின்னராசா(மாசி) அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
நகைச்சுவை உணர்வுடன் கூடிய நாடகங்களை மக்களுக்கு வழங்கி என்றும் மக்களை சிரிக்க வைக்கும் பெருமை கொண்ட எமது பிரதம விருந்தினரை கௌரவித்து எமது சபை இவ் வருட கௌரவம் விருதினூடாக “முதுபெரும் நகைச்சுவை நாடக மன்னன்” எனும் விருதினை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினராக
கலாவித்தகர் புஸ்பராஜன் கலைவாணி
சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கலாவித்தகர் புஸ்பராஜன் கலைவாணி
இசைத்துறையில் தன்னை அர்ப்பணித்து வயலின் இசையோடு எமது கிராமத்திற்கு என்றும் இசைப்பணி ஆற்றி வரும் ஓய்வுநிலை சங்கீத ஆசிரியை கலாவித்தகர் புஸ்பராஜன் கலைவாணி அவர்கள் இம்முறை எமது சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு பல நல்ல விடயங்களை எடுத்துரைத்து எமது சபையினை பாராட்டினார்.
அத்தோடு 2019 ஆம் ஆண்டு கௌரவம் விருதினூடாக “இசைவாணி” எனும் பட்டத்தினையும் எமது சபை அவருக்கு வழங்கி கௌரவித்தது.
லோகநாதனின் சிரிக்க சிந்திக்க
திரு.நா.லோகநாதன் அவர்களின் அனுசரணையிலும் நெறியாழ்கையிலும் இடம்பெற்ற போட்டி நிகழ்வு.
கனடா நாட்டில் வாழ்ந்து வரும் எம்மவரான நா.லோகநாதன் அவர்களின்
நெறியாழ்கையில் இம்முறை விசேடமாக “சிரிக்க சிந்திக்க” எனும் போட்டி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.இப் போட்டி நிகழ்வுகளின் வெற்றியாளர்கள்
1ம் இடம்:- திரு பே மயூரன்
2ம் இடம்:- செல்வன் அ விஸ்வகாந்தன்
3ம் இடம்:- செல்வன் ஜெ சாய்சந்தர்
வெற்றியாளர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
அதே வேளை நா. லோகநாதன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க எதிர்வரும் வருடங்களில் “Quiz” எனும் பெயரில் பொதுஅறிவு போட்டியாக இந் நிகழ்வு இடம்பெறும்.
வதிரி சைவசமய பாதுகாப்புச்சபையின் சிவராத்திரி அரங்கில் நீண்ட நாட்களின் பின்னர் கலாபூசணம் வதிரி சி.ரவீந்திரன் அவர்களின் தலைமையில் “புதியதோர் உலகம் செய்வோம்” எனும் தலைப்பில் கவியரங்கம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
பங்குபற்றியவர்கள்
1. கலாபூசணம் வதிரி கண.எதிர்வீரசிங்கம்
2. சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.இரா.இராஜேஸ்கண்ணன்
3. கரவை திரு.பி.பிறேமதாசன்
4. அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சு.சுமன்
இன்னிசைக் கச்சேரி
தேசியவெற்றியாளர் செல்வி சப்தகி பார்த்திபன் வழங்கிய
அட்டகாசமான கர்நாடக இசைக் கச்சேரி
தேசிய வெற்றியாளர் செல்வி சப்தகி பார்த்திபன் வழங்கிய அட்டகாசமான கர்நாடக சங்கீத
இசைக் கச்சேரி மிகசிறப்பாக நடைபெறது
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற தேசிய கர்நாடக சங்கீத போட்டியில் வெற்றி பெற்று எமது கிராமத்திற்கு பெருமை சேர்ந்த செல்வி சப்தகி பார்த்திபன் அவர்கள் வழங்கிய அற்புதமான இசைக்கச்சேரியின் பதிவுகள்.
“இளமை ஊஞ்சலாடுகிறது”
சிறப்பு நகைச்சுவை நாடகம்
நகைச்சுவைத் தென்றல் அல்வாயூர் சிவகுரு கணேசன் நடிப்பில் , இம்முறை வதிரி சைவசமய பாதுகாப்புச்சபையின் பிரமாண்டமான தயாரிப்பில் எம் கிராமத்தவர்களும் இணைந்து நடித்த “இளமை ஊஞ்சலாடுகின்றது” நகைச்சுவை உணர்வுடன் சிந்திக்க வைத்த சமூக சீர்திருத்த நாடகம்.
வெளிநாட்டு மோகம் கொள்ளும் குடும்பத்தலைவி மூலம் ஓர் ஆசிரியரின் குடும்பத்தில் நிகழும் மாற்றங்கள் தொடர்பாக வெளிச்சம் போட்டு காட்டிய சிறப்பு நாடகமாக இது விளங்குகின்றது.
செல்வி திவ்யா பொன்ராஜன் நெறியாழ்கையில்
அற்புதமான நாட்டிய நாடகம்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சிவராத்திரி அரங்கினை சிறப்பிக்கும் முகமாக செல்வி திவ்யா அவர்களினுடைய நெறியாழ்கையில் கிருஸ்ண சிருஸ்டி ஆடற்கள மாணவிகள் வழங்கிய அற்புதமான நாட்டிய நாடகத்தின் பதிவுகள்.
பாதுகாப்பு சபையின் செயலாளர் திரு.வீ.சரத்குமார் அவர்களின்
நன்றியுரையோடு விழா இனிதே நிறைவேறியது
நீண்ட நாட்களுக்கு பின்னர் சிவராத்திரி அரங்கினை சிறப்பிக்கும் முகமாக செல்வி திவ்யா அவர்களினுடைய நெறியாழ்கையில் கிருஸ்ண சிருஸ்டி ஆடற்கள மாணவிகள் வழங்கிய அற்புதமான நாட்டிய நாடகத்தின் பதிவுகள்.






































































