சுப்பர் சிங்கர் 4

ஒரே பார்வையில் சுப்பர்சிங்கர் 4



#சிவராத்திரி நிகழ்வு-2019 
#அதிகாலை-12.30 மணிக்கு
#போட்டி இசை நிகழ்வு- “சூப்பர் சிங்கர்-04

சிவராத்திரி அரங்கில் பலரது பாராட்டுக்களையும் ஆதரவுகளையும் பெற்று தொடர்ந்து நான்காவது வருடமாக திறமைகளை வெளிக்கொணர்ந்து வரும் , வதிரி சைவசமய பாதுகாப்புச்சபை பெருமையுடன் வழங்கிய சுப்பர் சிங்கர் 4.
“வர்சன் எலக்ரோனிக்ஸ் மற்றும் 
ரஜினி மெக்கானிக்ஸ் & சேவிஸ் சென்ரர்” 
அனுசரணையில் நடைபெற்ற பிரமாண்ட இசையணித்தேர்வு நிகழ்வு ,
#சூப்பர் சிங்கர்-04#” இசைப் போட்டி நிகழ்வு.
#இணை அனுசரணை
1முதலாம் பரிசு :- ரூபா 10,000/- @ திரு நா லோகேந்திரா (பேபி ஆர்ட்ஸ்)
2.இரண்டாம் பரிசு:- ரூபா 5,000/- @ திரு க விஸ்ணுதரன் (வதிரி மேற்கு)
3.மூன்றாம் பரிசு:- ரூபா 2,500/- @ திரு நா துஸ்யந்தன் (வதிரி)
4.விசேட பரிசில்கள்:- திரு எ சற்குணன் (வதிரி)
பணப்பரிசுகளுடன் வெற்றிக்கேடையங்களும்.

1. பிரபாகரன் தீபிகா- அல்வாய் வடக்கு
2. கௌரிகாசன் அக்சயன்- அரியாலை
3. சாந்தநாதன் சயேந்திரா- வதிரி
4. அச்சுதன் சந்திரமலர்- வதிரி
5. சிவரஞ்சன் கோகுலன்- கரவெட்டி மேற்கு
6. தங்கராஜா இந்திக்கா- வதிரி
#உலகப் புகழ்பெற்ற வாத்தியக் கலைஞன் பானுதீபன் அவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்வில் பங்கேற்பது எமது நிகழ்வின் சிறப்பம்சமாகும். இம்முறை எமது சூப்பர் சிங்கர் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக வருகிறார்.
உலகெங்கிலும் தன்னுடைய “ஒக்ரபாட்” வாத்தியத்தினூடாக பல தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள, சாரங்கா இசைக்குழுவின் முண்ணணி வாத்தியக்கலைஞரும் எமது சபையின் அபிமானியுமாகிய “பானுதீபன்” அவர்கள் எமது சப்தம்ஸ் இசைக்கலைஞர்களோடு இணைந்து பிண்ணணி இசை வழங்கவுள்ளார்.
கடல் கடந்து இசை வழங்குவது மட்டுமில்லாமல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் S P பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் இவர் பிண்ணணி இசை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றும் இந்தியக் கலைஞர்கள் பங்குகேற்று இலங்கையில் நடைபெறும் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் இவரின் பங்கு ஒரு முக்கிய அப்சமாகும். அப்படிப்பட்ட ஒரு கலைஞன் எமது சுப்பர்சிங்கள் நிகழ்வில் கலந்து கொள்ள்வது எமது நிகழ்விற்கு மேலும் ஒரு சிறப்பாகும். இப்படியான ஒரு இசையோடு வாழும் இசைத்தமிழ் மகனின் இன்னிசைக்காக காத்திருக்கின்றோம்.

#சூப்பர் சிங்கர் அனுசரணையாளர்கள், 
பாதுகாப்புச்சபை உறுப்பினர்கள், நடுவர்கள், விருந்தினர்கள்



#சூப்பர் சிங்கர் தருணங்கள்

























#சூப்பர் சிங்கர் அன்பளிப்புகள்





#சூப்பர் சிங்கர் நிகழ்வின் வெற்றியாளராக திருமதி சந்திரமலர் அச்சுதன் தெரிவு செய்யப்பட்டார்.......
எமது சபையினுடைய பிரமாண்டமான தயாரிப்பாக வருடாவருடம் நடாத்தப்பட்டுவரும் சூப்பர் சிங்கர் போட்டி நிகழ்வில் அதிகளவான ரசிகர்கள் முன்னிலையில் பலத்த போட்டிகளின் மத்தியில் தன் திறமைகளை செவ்வனே வெளிப்படுத்தி முதலாம் முதலாம்
இடத்தினை பெற்று ரூபா 
10,000/-மற்றும் வெற்றிக் கேடயத்தை தட்டிச் சென்றார் திருமதி சந்திரமலர் அச்சுதன். இரண்டாம் இடத்தினை பெற்று ரூபா 5,000/- மற்றும் வெற்றிக் கேடயத்தை செல்வன் சிவரஞ்சன் கோகுலன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இவர்களோடு மூன்றாம் இடத்தினை பெற்று ரூபா 2,500/- மற்றும் வெற்றிக் கேடயத்தை செல்வி இந்திக்கா தங்கராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மேலும் செல்வி தீபிகா பிரபாகரன், செல்வன் கௌரிகாசன் அக்சயன், திரு சாந்தநாதன் சயேந்திரா ஆகியோர் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியதன் வகையில் பங்குபற்றியமைக்கான கேடயத்தினையும் ரூபா 1,000/- இனையும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வினை சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.







விழாவின் சிறப்பம்சம்
வெற்றியீட்டிய பணப்பரிசினை ஆலய கும்பாபிசேகத்திற்கு வழங்கிய 
தங்கமகள் திருமதி அச்சுதன் சந்திரமலர்
சூப்பர் சிங்கர் நிகழ்வில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற ரூபா 10,000/-
பணப்பரிசிலினை வெற்றியாளராகிய சந்திரமலர் அவர்கள் ஆலய கும்பாபிசேக நிதியாக ஆலய பரிபாலன சபையின் செயலாளர் திரு பாலேந்திரம் பிரசன்னாவிடம் வழங்கினார்.
இதே போல் கடந்த வருடமும் வெற்றியாளராகிய செல்வி வர்சனா தவராஜா அவர்களும் பணப்பரிசிலினை ஆலயசபைக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.


#Paṇapa is the golden daughter who has given the temple to the temple kumpāpicē.

In the event of super singer, the 10,000th of the 10,000th
century, the 10,000th of the 10,000th century, the win Chandra, the secretary of the temple, the secretary of the temple, the secretary of the temple, the secretary of the temple.

In the same way, the last year and the winner of the winner, cell,.,., and the currency are given to the temple council.
பானுவிற்கு கெளரவிப்பு
#உலகப் புகழ்பெற்ற வாத்தியக் கலைஞனிற்கான சைவசமய பாதுகாப்புச் சபையின் கௌரவம். மிகவும் சிறப்பாக உலகப் புகழ்பெற்ற ஒக்ரபாட் வாத்தியக் கலைஞன் “பானுதீபன்” அவர்களிற்கான கௌரவத்தினை வழங்கியது எமது சபை.
எமது அழைப்பினை ஏற்று சூப்பர் சிங்கர் நிகழ்வில் சப்தம்ஸ் கலைஞர்களோடு பிண்ணணி இசையினை வழங்க வந்த
இசைத்தமிழ் மகனின் இனிய இசைப்பயணத்திற்கு எமது மனம் நிறை வாழ்த்துக்கள்.


சிறப்பு & விசேட விருந்தினர்
#சூப்பர் சிங்கர் நிகழ்வின் விசேட விருந்தினராக கலந்து சிறப்பித்த சந்திரகாசன் அவர்கள்...வதிரி தமிழ் மன்றத்தின் தற்போதைய தலைவரும் எமது சப்தம்ஸ் இசைக்குழுவின் முண்ணணி பாடகருமாகிய திரு இரகுநாதன் சந்திரகாசன் அவர்கள் இம்முறை சூப்பர் சிங்கர் நிகழ்வில் விசேட விருந்தினராக பங்குபற்றி சிறப்பான பாடல்களை எமது போட்டியாளர்களுடன் இணைந்து வழங்கியமைக்காக எமது சபை நன்றியுடன் கூடிய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இவருடன் சேர்ந்து  இன்னொரு விசேட விருந்தினராக கலந்து சிறப்பித்த தேவராஜன் அவர்கள்...எமது சப்தம்ஸ் இசைக்குழுவின் முண்ணணி பாடகராகிய திரு தம்பிராஜா தேவராஜன் அவர்கள் இம்முறை சூப்பர் சிங்கர் நிகழ்வில் விசேட விருந்தினராக பங்குபற்றி சிறப்பான பாடல்களை எமது போட்டியாளர்களுடன் இணைந்து வழங்கியமைக்காக எமது சபை நன்றியுடன் கூடிய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

சப்தம்ஸ்
#பிண்ணனி இசையினை செவ்வனே வழங்கி வரும் சப்தம்ஸ் இசைக்குழு
வருடா வருடம் எமது சிவராத்திரி நிகழ்வுகள், இளைஞர் திருவிழா ஆகியவற்றிற்கு எவ்வித கொடுப்பனவுகளுமின்றி தங்களின் பொன்னான நேரங்களை கிராமத்திற்காக அர்ப்பணித்து சிறப்பான இசையினை எமது மக்களுக்கு வழங்கி அசத்தினார்கள்.





எமது  சப்தம்ஸ் இசைக்குழுவின் வாத்திய கலைஞர்களிற்கு எமது மனமார்ந்த நன்றிகள். 
1. ஓகன்:- திரு லோகநேசன் நிமலன்
2. ஓகன்:- திரு வரதராசன் மனோறாஜ்

3. கிற்றார்:- திரு மகேந்திரன் பானுசன்

4. ஒக்ரபாட்:- திரு வ பானுதீபன் (சாரங்கா இசைக்குழு)

5. அறிவிப்பாளர்:- திரு இராஜேந்திரன் ஜெயந்தன்
அத்தோடு எமது ஒத்திகைகளுக்கு மின்சார வசதிகள், இட வசதிகளை வழங்கிய திரு மாணிக்கம் இலக்குமிகாந்தன் குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுரை

#நன்றியுரையில் செயலாளர் திரு வீரகுமார் சரத்குமார்


இறுதியாக வதிரி பூவற்கரையானின்  செயலாளர்
திரு.வீரகுமார் சரத்குமார் அவரின் நன்றியுரையுடன் 
விழா இனிதே நிறைவேறியது